படிப்போமா "திருக்குறள்"(26/27/28/29/30)

 


        குறளோடு உறவாடு (26)

******************************

              🍁 நீத்தார் பெருமை

                🙏குறள்

"சுவையொளி ஊறோசை நாற்றமென்  றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.."

                💐உரை

சுவை, ஒளி, தீண்டல், ஓசை, வாசனை என்கிற ஐந்து வகைகளை ஆராய்பவனின் அறிவினிடத்தே உலகம் இருக்கும்.


குறளோடு உறவாடு (27)

*****************"************

                 🙏குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்...."

                  💐உரை

பயன் நிறைந்த சொற்களை சொல்லும் முனிவர்களின் பெருமையை அந்த தேசத்து நல்ல நூல்களே காட்டி விடும்.


குறளோடு உறவாடு (29)

******************************

                  🙏குறள்

"குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது.."

                  💐உரை

உயர்ந்த குணம் என்கிற குன்றின் மேல் நின்றவர்களது கோபம், கணநேரம் ஆனாலும் கோபிக்கப்பட்டவர்களால் தடுக்க முடியாது.


குறளோடு உறவாடு (30)

******************************

                   🙏குறள்

"அந்தணர் என்போர் அறவோர்மற்று  எவ்வுயிர்க்கும் செந்தண்மை  பூண்டொழுக லான்...."

                   💐உரை

ஆசைகளை அறுத்து அறவழியில் நிற்கும் அந்தணர் எப்படிப்பட்டவர்கள் என்றால், எல்லா உயிர்களிடத்தும் அன்போடும் அருளோடும் நடந்து கொள்பவர்கள் ஆவர்.

                       

                             🙏திருவள்ளுவர்


- க.இராமலிங்க ஜோதி.

-


குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏