குறளோடு உறவாடு (24/25/26)

 


குறளோடு உறவாடு (24)

******************************

         🍁 நீத்தார் பெருமை

                   🙏குறள்

" உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரணென்னும் வைப்பிற்கோர் வித்து..."

                    💐உரை

அங்குசம் போல் மனவலிமை கொண்டு ஐம்புலன்களையும் காக்க வல்லவன், எல்லாவற்றிற்கும் மேலாக கருதப்படும் பேரின்ப நிலத்தில் விதைப்பவன் ஆவான்.


குறளோடு உறவாடு (25)

******************************

                      🙏குறள்

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான் இந்திரனே சாலுங்  கரி...."

                      💐உரை

ஐம்புலன்களை அடக்கியவனின் வலிமைக்கு, விரிந்த வானத்துத் தலைவனாம் இந்திரனே சாட்சியாவான்.


குறளோடு உறவாடு (26)

******************************

                          🙏குறள்

"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்..."

                           💐உரை

செய்ய முடியாத அரிய செயலை மக்களுக்கு செய்பவரே பெரியர். அப்படி செய்ய முடியாமல் சாதாரண சராசரி செயலை செய்பவர் சிறியராவார்.


                            🙏திருவள்ளுவர்


 க.இராமலிங்க ஜோதி.குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏