ஆர் எஸ் பாரதி இப்படி பேசலாமா

 


        ஆர் எஸ் பாரதி இப்படி பேசலாமா?!

     👉ராஜீவ் நட்பகத்தின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாள் விழாக்கள் கொண்டாடப்பட்டன. தியாகராயர் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ராஜீவ் நட்பு கத்தின் நிறுவனர் கவிஞர் ராமலிங்கம் ஜோதி தலைமை தாங்கினார் அப்போது அவரிடம் காமராஜர் குறித்து முன்னாள் எம்பி ஆர் எஸ் பாரதி கூறிய கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்த ராமலிங்க ஜோதி பெருந்தலைவர் குறித்து திமுக முன்னாள் எம்பி கூறியிருக்கும் கருத்துக்கள் கடும் கண்டனத்திற்கு உரியவை  திமுகவினரின் விரல்கள் எல்லாம் வெட்டுவதாக  காமராஜர் கூறியதாக பாரதி தெரிவித்த கருத்துக்கள் உண்மையல்ல காமராஜர் தன்னுடைய வாழ்நாளில் இவருடைய விரலை வெட்டுவேன்அவருடைய விரலை வெட்டுவேன் என்றெல்லாம்  அநாகரீகமாக பேசியது இல்லை.தங்களை எதிர்த்து திமுக வெற்றி பெற்ற போதும் ஜனநாயகம் வெற்றி பெற்றதாக பெருமிதத்துடன் கூறினார். 


அத்தகைய பெரும் தலைவரைப் பற்றி இப்படிப் பேசுவது பாரதிக்கும் அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானதல்ல.  மேலும் பெருந்தலைவர் காமராஜருக்கு கல்லறை கட்டியதும் தாங்கள் தான் என்று கூறுவது சரியல்ல என்றும் அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில்  காந்திஜி காமராஜர் மற்றும் லால்பகதூர் சாஸ்திரி உருவப்படங்கள் பூ மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தப்பட்டது காந்திஜி பெருந்தலைவர் காமராஜர் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை வாழ்த்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.