திருமண நிகழ்ச்சியில் எதார்த்தமாக சின்னம்மாவை(வி.கே.சசிகலா) சந்தித்தேன்
இபிஎஸ் எப்படி முதலமைச்சரானார், எப்படி கட்சியை அபகரிக்க துடிக்கிறார் என்பது கடைக்கோடி தொண்டனுக்கும் தெரியும்.
அவரின் ஆணவப் போக்கிற்குு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள
- வைத்திலிங்கம், ஓபிஎஸ் ஆதரவாளர்
🍁🍁🍁🍁🍁
👉முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது
*எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு
*சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தலாம் - உச்ச நீதிமன்றம்.
🍁🍁🍁🍁🍁
💢ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதிமுக எம்எல்ஏக்களே கட்சி தலைமையிடம் பேசுவதில்லை
கண்துடைப்பு பதவியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி - முதல்வர்
🍁🍁🍁🍁🍁
💥அரசுப் பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி
பள்ளி மாணவிகளிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 'பிராஜக்ட் பள்ளிக்கூடம்' என்ற நிகழ்ச்சியை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் கோவை மாவட்ட போலீசார் தொடங்கிவைத்தனர்.
🍁🍁🍁🍁🍁
💥காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த விவகாரம்
காரைக்கால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவத்தில் 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.
🍁🍁🍁🍁🍁
💥சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம்
விஷால் ஆஜராகாத நிலையில், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கான அவகாச கோரிக்கையை ஏற்றது சென்னை உயர் நீதிமன்றம்
₨21.29 கோடி கடனை செலுத்தாமல் படத்தை வெளியிடுவதாக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு.
🍁🍁🍁🍁🍁
💥கல்வி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்”- நீதிமன்றம்
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
🍁🍁🍁🍁🍁