75ம்ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை
சர்தியாகராயா மெட்ரோ ரயில் நிலையம்
முன்பாக காங்கிரஸ் வீரர்கள் அணி வகுப்பு நடைபெற்றது.
75 செயல்வீரர்கள்,நேரு கதர் குல்லாவுடன்,75 தியாகிகள் திருவுருவப் படங்களை ஏந்தியபடி
பொதுமக்கள் தரிசன பாதயாத்திரை
மேற்கொண்டனர்.
சர் தியாகராய கல்லூரி
வண்ணாரப்பேட்டை, மெட்ரோ ரயில் நிலையம் அருகே தொடங்கிய பாதயாத்திரை அவதான ராமசாமிதெரு,
பாலு முதலி தெரு, ஶ்ரீரங்கம்மாள் தெரு, சோலையப்பன் தெரு,
சஞ்சீவராயன் கோவில் தெரு,கப்பல் போலுதெரு,எம்.சி.ரோடு வரை பேரணியாக வலம் வந்து காமராஜர் பூங்காவில் நிறைவுற்றது.
தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுசெயலாளர் இராமலிங்க ஜோதி தலைமையில் நடைபெற்ற தரிசன பாதயாத்திரையை கொடி அசைத்து தொடக்கினர் . தேசியக் கொடி ஏற்றி மகாத்மா காந்தி சிலைக்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்வில் சர்க்கில்
தலைவர்.டி.கே.மூர்த்தி, மாவட்ட மைனாரிட்டி பிரிவு தலைவர் ஏ.எஸ்.ஷாஜகான்,கே.வி.எஸ்..தயாளன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.பொன்னுரங்கம்,மாவட்ட வர்த்தகப் பிரிவு தலைவர். வே-உமாபதி,மனித உரிமை மாநில செயலாளர் பி.வேலா, முன்னாள் முண்ணால் மாமன்ற உறுப்பினர எம்.கே.பாபு சந்தரம்,கே.ராஜேந்திரன்,ஜே.ஜெயபிரகாஷ்,
ராகுள்,சையத் அகமதுஹெரில்,அதிரடி ஆசைத்தம்பி,டி.ஆனந்தராஜ்,பார்தசாரதி,ஆர்.கே.சிவராஜ்,சாகுல் வட்டத்தலைவர் வி.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் பாதயாத்திரையில் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் பொது செயலாளர் ராமலிங்க ஜோதி தனது உரையில் இந்த 75வது சுதந்திர தினத்தில் நாம் அனைவரும் போதை ஒழிப்போம் என்று சபதம் ஏற்போம் என்று சூலூரைத்தார்.
செய்தியாளர் தங்கதுரை