கல்லூரிகளில் சேர மேலும் அவகாசம் அமைச்சர் பொன்முடி

 


        பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பம் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.சிபிஎஸ்சி ரிசல்ட வந்த ஐந்து நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது  



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்ய நேற்று கடைசி நாள். ஆனால் இன்னும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. எனவே அந்த மாணவர்களும் பயன் அடைய வேண்டும். அதன் பொருட்டு


பொறியில் விண்ணப்பம் செய்ய 17 கடைசி நாள். எனவே சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகி 5 நாட்கள் அவர்களுக்கு அவகாசம் இருக்கிறது. 


எனவே சிபிஎஸ்இ  தேர்வு முடிவுகள் வரும் வரை காலநீட்டிப்பு செய்கிறோம். கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்து கொள்ளலாம். சிபிஎஸ்சி ரிசல்ட் தேதி தெரியாத நிலையில் அவற்றிற்கான ரிசல்ட் வெளியான பின்னர் ஐந்து நாட்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும்*நாள் குறிப்பிடாமல் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது*


பொறியியல் செமஸ்டர் ஆன் லைன்  தேர்வில் தோல்வி ஏற்பட்டு இருந்தாலும் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படாது. கொரோனா காலம் என்பதால் இந்த சிக்கல், அடுத்த செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் 


அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தேதி குறித்து  ஆளுநர் தான் அறிவிக்க வேண்டும் இது குறித்து ஆளுநரிடம் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் 

அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அதன் சிண்டிகேட் உறுப்பினராக உள்ள  திமுக எம்எல்ஏ உதயநிதி  பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை 


அரசியலில் ஈடுபடும் மாணவர்கள் சுவற்றில் அடித்த பந்தாக   இருக்க வேண்டும் மாறாக சேற்றில் அடித்த  பந்து ஆக இருக்கக் கூடாது என்று அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டதை அமைச்சர் பொன்முடி  சுட்டிக்காட்டினார் 

அதாவது அரசியலில் பங்கேற்கும் மாணவர்கள் அது குறித்து தெரிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கருணாநிதி அவ்வாறு கூறியதாக அவர் தெரிவித்தார் 


எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ டான்செட் தேர்வு முடிவு வந்து இருக்கிறது. இனி  கவுன்சிலிங் நடப்பதற்கான தேதிகளை உயர்கல்வி துறை வெளியிடும்


3 லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள் அரசு கலை கல்லூரிக்கு விண்ணப்பம் செய்து இருக்கின்றனர். 


கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 25 சதவீதம்  உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனி கல்லூரிகளில் பேராசிரியர்கள், கட்டமைப்பு வசதி பொறுத்து தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் 


பொறியியல் கல்லூரிகள் தரம் குறைவாக இருப்பதான புகார் குறித்து ஆய்வு செய்வார்கள். உண்மை இருந்தால் நடவடிக்கை எடுப்போம். அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் தரத்தை கண்காணிக்கவும், உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்


உயர் கல்வி படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அவைகள் ஆய்வு செய்யப்பட்டு பின் கல்லூரிகள் தொடங்கப்பட்ட பின்னர் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.


செய்தியாளர் பாஸ்கர்