ஒரு வரி செய்திகள்

 


வீடியோ


    👉மகாராஷ்டிரா போல் தமிழ்நாட்டிலும் ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்படும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

🎇🎇🎇🎇🎇

   

 👉முதல்வர் தலைமையில் இன்று நாமக்கல்லில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.


🎇🎇🎇🎇🎇

    😪சென்னை: மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவன் அஷ்ரப்(17) அலையில் சிக்கி உயிரிழப்பு


கரை ஒதுங்கிய மாணவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை


🎇🎇🎇🎇🎇


        👉மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக தொழிலதிபர் மீது பதிவான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


பொய்யான வழக்கு என விசாரணையில் கண்டறியப்பட்டால் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதி

🎇🎇🎇🎇🎇

    💥நாமக்கல், சிலுவம்பட்டியில் நரிக்குறவர் வீட்டில் தேநீர் அருந்தினார் முதல்வர் ஸ்டாலின் 


நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பத்தாரிடம் முதல்வர் கலந்துரையாடல்

🎇🎇🎇🎇🎇

    💥தூத்துக்குடி: ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் அழகர் தற்காலிக பணியிடை நீக்கம் 


மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு

🎇🎇🎇🎇🎇

    👮பழனி தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்ஐ இசக்கி ராஜா தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்க்கு  இடமாற்றம் செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

🎇🎇🎇🎇🎇

    👉மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை கடத்தி வரப்பட்ட ₹98.55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் பறிமுதல்


இலங்கையைச் சேர்ந்த முகமது இம்ரான் என்பவரை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது 11 பண்டல் தங்கப்பசை கண்டுபிடிப்பு

🎇🎇🎇🎇🎇

    🌺கோவை: 3 வயது மகளுக்கு "சாதி, மதம் இல்லை" என சான்றிதழ் பெற்ற பெற்றோர்

🎇🎇🎇🎇🎇

🌺பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸுக்கு சொந்தமான ₹234.75 கோடி சொத்துகளையும் முடக்கியது அமலாக்கத்துறை!

🎇🎇🎇🎇🎇

🌺மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி சொத்துகள் முடக்கம்

🎇🎇🎇🎇🎇

🌺புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் 

மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு

🎇🎇🎇🎇🎇

🌺பதிவாளர் அலுவலகத்திற்கு முதியோர்கள் பத்திரப்பதிவு செய்ய வந்தால், அவர்களை காத்திருக்க வைக்க கூடாது;


மீறும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

- அமைச்சர் மூர்த்தி

🎇🎇🎇🎇🎇

🌺திண்டுக்கல் மாவட்டத்தில் விரைவில் TNPSC, UPSC, சிவில் சர்வீஸ் கான பயிற்சி மையம் அரசு சார்பில் விரைவில் தொடங்கப்பட உள்ளது திண்டுக்கல்லில் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு.


🎇🎇🎇🎇🎇


செய்தியாளர் பாலாஜி