காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் மருத்துவக் கல்லூரி முதல்வர் ...மேலும் சில செய்தித் துளிகள்

 


    👉மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்ட விவகாரம்

மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு.


    👉திராவிட மாடலின் அரசனாக திகழ்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்; 


மாநில உரிமைகளைக் காப்பதில் சிங்கமாக இருப்பவர் நம் முதலமைச்சர்- அமைச்சர் அன்பில் மகேஸ்


குலக்கல்வி, சமஸ்கிருதத்தை நுழைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்;


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாத தமிழ் கலாச்சாரம் ஒன்றிய அரசுக்கு தெரிந்திடுமா?;


எங்களுக்குத் தேவையானதை, நாங்கள் செய்துகொள்கிறோம்;- அமைச்சர் அன்பில் மகேஸ்


    🙏நடிகர் விவேக்கின் பெயரை அவர் வசித்த பகுதிக்கு  சூட்ட வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


    👉சென்னை: திருவான்மியூரில்  நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவர் குத்திக் கொலை.


     👉19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர் விலை ₹102.50 உயர்ந்து, ₹2355.50-ஆக விற்பனை.


    🙏பெருங்குடி தீயை அணைத்தவர்களுக்கு முதல்வர் பாராட்டு


மே தினத்தையொட்டி முதல்வர் உறுதிமொழி ஏற்பு

”தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் கேடயமாகவும், போர்வாளாகவும், திமுக அரசு எப்போதும் திகழும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    👉திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் முகிலன்(22) என்ற இளைஞர் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டிக்கொலை


திருவிழாவில் ஏற்பட்ட இருதரப்பு மோதலால் நடந்தேறிய கொடூரம் - போலீசார் குவிப்பு


    👉உலக அளவில் கொரோனா தீவிரம்... மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.33 கோடியாக அதிகரிப்பு!!


    👉மீன்பிடி தடை காலத்தால், சென்னை காசிமேடு சந்தையில் மீன் விலை இரு மடங்கு அதிகரிப்பு!


     👉ஈரோடு : சென்னிமலை அருகே ஒடக்காடு  உப்பிலிபாளையத்தில் துரைசாமி என்ற விவசாயியை கொன்று நகை, பணம் கொள்ளை


படுகாயம் அடைந்த துரைசாமியின் மனைவி ஜெயமணி மருத்துவமனையில் அனுமதி


     👉நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகிடக் கூடும் என்ற கூற்று முற்றிலும் கற்பனையானது


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


    👉 தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ₨252.34 கோடிக்கு மது விற்பனை*


*இன்று மே தினம் விடுமுறை என்பதால் நேற்று அதிகளவில் மது விற்பனை*


*அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ₨54.89 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ₨52.28 கோடிக்கும் மது விற்பனை*


     👉தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதன் மூலம், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை வலுப்படும்

- ஆளுநர் ஆர்.என்.ரவி


     👉ஈரோடு ஈபிபி நகரில் வீட்டை விற்க மனைவி சம்மதிக்காததால் ஏற்பட்ட சண்டையில் மனைவியை கழுத்து நெறித்து கொலை செய்த கணவர்.


     👉பெரம்பலூர் அருகே சட்டவிரோத கருக்கலைப்பால் லெப்பைகுடிகாடு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் உயிரிழப்பு.



     👉திண்டுக்கல்: ஆடலூர் பன்றிமலை செல்லும் மலைப்பாதையில் அமைதிசோலை பகுதியில் லாரியை வழிமறித்த காட்டுயானை.


செய்தியாளர் பாலாஜி