ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் திடீர் ஆய்வு

 


    நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு கிராமதில்லுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் திடீர் ஆய்வு


பொதுமக்கள், மருத்துவர்களிடம் கோரிக்கையைக் கேட்டறிந்து உடனடியாக சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அலுவலர்களுக்கு உத்தரவு

 

மருத்துவ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று மாலை ஊட்டிக்கு வந்தார். அங்கு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர்  இரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.

  

அமைச்சர்  காலை 5 மணிக்கு தொட்டபெட்டா பகுதிக்குச் சென்ற அமைச்சர், அங்கிருந்து (ஊட்டி- கோத்தகிரி சாலையில்) கட்டபெட்டு கிராமம் வரை 16 கிலோ மீட்டர் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார். ஓட்டப்பயிற்சிக்குப் பின், கட்டபெட்டுவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்லி அருகே உள்ள நொய்டா நகரில் சமீபத்தில், தன்னுடைய 135வது மாரத்தான் ஓட்டத்தை ஓடி நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


உதகை: தமிழகத்தில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.



         நீலகிரி மாவட்டம் உதகை மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சி உதகை மருத்துவக்கல்லூரியில்  நடந்தது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கினார். 


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''உதகையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது மக்களுக்கு வர பிரசாதமாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைத்து மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி கட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டு, முதல்வர் முன்னிலையில் பிரதமரால் திறக்கப்பட்டது.


தமிழகத்தில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


செய்தியாளர் மணிவண்ணன்