திமுக மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா மாபெரும் வெற்றி

 


    மாமன்றத் தேர்தலில் 4,368 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்ற இளைய அருணா . சென்னை ராயபுரம் 49 வது வார்டில் போட்டியிட்ட திமுக மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா 4 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்,சென்னை ராயபுரம் 49 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டவர் இளைய அருணா, திமுகவின் வடசென்னை மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவார்.  49 வது வார்டில் திமுகவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர், 


இந்த வார்டில் மூன்று சுற்று வாக்குகள் எண்ணப்பட்டதில் மூன்றிலும் இளையஅருணா முன்னணியில் இருந்தார் தபால் வாக்குகளோடு மொத்தம் 7075 வாக்குகள் பெற்று அருணா மகத்தான வெற்றி பெற்றார், அதிமுக வேட்பாளர் அரசு, 2, 700 வாக்குகள் பெற்றார், இந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வன்னியராஜன், 1445 வாக்குகளும் அமமுக வேட்பாளர் வர்மா, 142 வாக்குகளும் பாமக சார்பில் போட்டியிட்ட ஸ்ருதி ராஜலட்சுமி 290 வாக்குகளும் பெற்றிருந்தனர், இந்த வார்டில் போடப்பட்ட 125 தபால் வாக்குகளில் 23 வாக்குகள் முதியோருக்கான ஆவணங்கள் சரியாக இல்லாததன் காரணமாக நிராகரிக்கப்பட்டது. மகத்தான வெற்றி பெற்று சென்னை மாமன்ற உறுப்பினர் ஆனார்  இளைய அருணா.



     48 வது வார்டில் வெற்றி பெற்று சென்னை  மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக பதவியேற்கும் சகோதரி   விஜயலட்சுமி விஜயகுமார் அவர்களுக்கு முன்னாள் திமுக இளைஞரணி வண்ணை அசோக்  வாழ்த்துக்களை தெரிவித்தார். திமுக கழக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.அவர் பெற்ற வாக்குகள் 7225.



    சென்னை 51 ம் வார்டில் வெற்றி பெற்ற மாநகராட்சி உறுப்பினர் அருமை சகோதரி நிரஞ்சனா ஜெகதீசன் அவர்களுக்கு வடசென்னை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



ராயபுரம் மற்றும் ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கழக மாமன்ற உறுப்பினருக்கு வண்ணை அசோக் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


நிருபர் பாலாஜி