முக்கியச் செய்திகள்...!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன
*********
நாசா அறிவிப்பு:
பூஸ்டர் என்று அழைக்கப்படும் ராக்கெட்டின் மேல்பகுதி அடுத்த மாதம் (மார்ச்) 4ஆம் தேதி நிலவில் மோத இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
****
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
*******
16 புதிய விமான நிலையங்கள்:
விரைவில் இந்தியாவில் 5 மாநிலங்களில் 16 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
********
வரும் 15ஆம் தேதி வரை:
மத்திய அரசு பணியாளர்களுக்கான work from home முறையை வரும் 15ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
*******
ஓய்வு பெறும் வயது உயர்வு:
ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த ஊழியர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தவும், மேம்பட்ட சுகாதார நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் தெரிவித்துள்ளார்.
*****6
ரத சப்தமி விழா:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய ஜெயந்தியையொட்டி ரத சப்தமி விழா வருகிற 8ஆம் தேதி நடைபெறுவதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
***
மாவட்டச் செய்திகள்
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் நாளை பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
********
இன்று முதல் அனுமதி:
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
*******-
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்:
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
*****
8வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 32-26 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து 4வது வெற்றியை தனதாக்கியது. மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 36-30 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி 9வது வெற்றியை ருசித்தது.
*****
மதுரை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர கடைக்குள் புகுந்து விபத்து*
விருதுநகர் : ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
**********
Wordleஐ வாங்கிய @nytimes!
வலைமகன்களிடம் நல்வரவேற்பை பெற்று வரும் #WORDLE சொல் விளையாட்டின் உரிமையை அமெரிக்க நாளிதழ் நிறுவனமான நியூ யோர்க் டைம்ஸ் வாங்கியது
Wordleஐ #NYT தளம் வாங்கினாலும் தொடர்ந்து கட்டணமின்றி விளையாடலாம் என அதன் வடிவமைப்பாளர் ஜோஷ் வார்ட்ல் உறுதி
திருமதி மோகனா