தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு

 


        தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்  உரையாற்றினார். 


அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்; அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்.அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன். அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அதிகம் பேசமாட்டேன்; செயலில்தான் காட்டுவேன்.


அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும்- போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதலமைச்சர் தன் உரையில் கூறினார்.


நிருபர் கார்த்திக்