இன்றைய ராசிபலன்

         _📅12- 10 - 2021⌚_*        ꧂

      *_🌻 செவ்வாய்-கிழமை_*

              *_🌈 புரட்டாசி:  - 26_*  

        *_🔎  ராசி பலன்கள்  🔍_*


  *╚═══❖•ೋ° °ೋ•❖═══╝*


*_🔯மேஷம் -ராசி: 🐐_*

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மைகள் நடைபெறும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.


⭐️அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.

⭐️பரணி : தடைகள் அகலும்.

⭐️கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

*---------------------------------------*


*_🔯ரிஷபம் -ராசி:  🐂_*

மனதில் பலதரப்பட்ட எண்ணங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். வர்த்தகம் மற்றும் போட்டிகள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.


⭐️கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.

⭐️ரோகிணி : சோர்வான நாள்.

⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

*---------------------------------------*


*_🔯மிதுனம் -ராசி: 👫_*

உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளை ஏற்ற, இறக்கமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பிறமொழி பேசும் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.


⭐️மிருகசீரிஷம் : சிந்தனைகள் உண்டாகும்.

⭐️திருவாதிரை : ஏற்ற, இறக்கமான நாள்.

⭐️புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

*---------------------------------------*


*_🔯கடகம் -ராசி: 🦀_*

சமூகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். அனுகூலம் உண்டாகும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.


⭐️புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

⭐️பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐️ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

*---------------------------------------*


*_🔯சிம்மம் -ராசி:  🦁_*

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம். 


⭐️மகம் : மந்தத்தன்மை குறையும்.

⭐️பூரம் : எண்ணங்கள் நிறைவேறும்.

⭐️உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

*---------------------------------------*


*_🔯கன்னி -ராசி: 🧛‍♀️_*

தந்தைவழி உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய முயற்சிக்கேற்ப உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.


⭐️உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

⭐️அஸ்தம் : நெருக்கடிகள் குறையும்.

⭐️சித்திரை : முன்னேற்றமான நாள்.

*---------------------------------------*


*_🔯துலாம் -ராசி: ⚖_*

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் பழைய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எழுத்து சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருப்தி உண்டாகும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 2

💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.


⭐️சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.

⭐️சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

⭐️விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

*---------------------------------------*


*_🔯விருச்சிகம் -ராசி: 🦂_*

நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும்.


ஊக்கத்துடன் செயல்பட வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். 


⭐️விசாகம் : பயணங்கள் கைகூடும்.

⭐️அனுஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.

⭐️கேட்டை : கலகலப்பான நாள்.

*---------------------------------------*


*_🔯தனுசு -ராசி: 🏹_*

கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரித்தாலும் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தோன்றும் தேவையற்ற புதுவிதமான சிந்தனைகளின் மூலம் பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.


⭐️மூலம் : நெருக்கடிகள் குறையும்.

⭐️பூராடம் : சாதகமான நாள்.

⭐️உத்திராடம் : பதற்றங்கள் ஏற்படும். 

*---------------------------------------*


*_🔯மகரம் -ராசி: 🐏_*

குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். புரிதல் அதிகரிக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். 


⭐️உத்திராடம் : லாபம் கிடைக்கும்.

⭐️திருவோணம் : இழுபறிகள் நீங்கும்

⭐️அவிட்டம் : சேமிப்புகள் குறையும்.

*---------------------------------------*


*_🔯கும்பம் -ராசி: 👃_*

பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பொருட்சேர்க்கை ஏற்படும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.


⭐️அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐️சதயம் : முன்னேற்றமான நாள்.

⭐️பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும்.

*---------------------------------------*


*_🔯மீனம் -ராசி: 🐠_*

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். காப்பீடு தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். தந்தைவழி தொழிலில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.


⭐️பூரட்டாதி : திட்டங்கள் ஈடேறும்.

⭐️உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

⭐️ரேவதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

*┈┉┅━••★★🌹🌹★★••━┅┉┈*


திருமதி மோகனா செல்வராஜ்