தமிழ்நாட்டுக்கு சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) நிதி உதவி

 


          தமிழ்நாட்டுக்கு சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) ரூ.524 கோடி தொழில் மேம்பாட்டு நிதி வழங்க உள்ளது. ரூ.524 கோடி நிதி உதவிக்கான ஒப்புதல் கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிட்பி தலைவர் வழங்கினார்.


 சிட்பி நிதி உதவியுடன் காஞ்சிபுரத்தில் நுண்பொறியியல் தொழில் தொகுப்பு உருவாக்கப்பட உள்ளது. கோவையில் மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழில் தொகுப்பு உருவாக்கப்படும். ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நாள் ஒன்றுக்கு 2 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கப்படும். 


ஒரக்கடத்தில் மருத்துவ உபகரணங்கள் தொழில் பூங்கா அமைக்கவும் சிட்பியின் நிதி பயன்படுத்தப்படும். பெருந்துறை, அம்பத்தூர், கோவை, தூத்துக்குடியில் தொழிலாளர் குடியிருப்புகள் கட்டவும் சிட்பி நிதி பயன்படுத்தப்படும். தொகுப்பு தொழில் மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.