தமிழ்நாடு பிரஸ்கவுன்சில் அமைப்பை ஏற்படுத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

 


        சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற  நீதிபதி தலைமையில், தமிழ்நாடு பிரஸ்கவுன்சில் என்ற அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டும்


தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரஸ்கிளப், பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும். தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. 


தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமே பத்திரிகையாளர்களுக்கு பஸ்பாஸ், வீட்டுமனை உள்ளிட்ட சலுகைகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.