தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் செய்தியாளர்களை சந்திப்பு

 

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள்  செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.


ஆவின்  நிறுவனத்தில் 636 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது அந்த பணியிடங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் அந்த பணியிடங்களுக்கு தற்போது TNPSC தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் தமிழகத்திற்கு வருகை அதிகரிக்கும் இதன் மூலம் தமிழகத்தில் பால் உற்பத்தி என்பது இனி வரும் காலங்களில் அதிகரிக்கும்.


தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட பிறகு விற்பனை என்பது நகர்ப்புறங்களில் குறிப்பாக அதிகரித்துள்ளதாகவும் இனிவரும் காலங்களில் தமிழக அரசு பால் கொள்முதலை அதிகரிக்கவும் விவசாயிகளை அதற்கு ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.