மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம்.

 


           *ஆவடி, திருச்சி , திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம்.* ஆவடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய  பி.நாராயணன் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.  ஆவடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக   காத்திருப்பார் பட்டியலில் இருந்த கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.


    திருச்சி மாநகராட்சி ஆணையராக பணிபுரியும் எஸ்.சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


     செங்கற்பட்டு நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபுர் ரஹ்மான் திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


   திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் கே.பாலசுப்பிரமணியன் சென்னை கிண்டியில் உள்ள உள்ளாட்சி அமைப்பு நடுவர் முறை மன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.