தமிழ்நாட்டில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்டுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது...

 


       தமிழ்நாட்டில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்டுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-


கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி 31-7-2021 முதல் 9-8-2021 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது மக்கள் அதிகம் கூடுவதும் அதனால் நோய்த் தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டு வருவதும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்படாவிட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.        சென்னையில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தன் விளைவாக சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 31-07-2021 முதல் 09-08-2021 வரை பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடுப்பாடு விதிக்கப்படும் பகுதிகள்:


1. சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை.


2. புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை.


3. ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை.


4. ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு , புலிபோன் பஜார்


5. என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை


6. இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை.


7. அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை.


8. ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை.


9. ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் நாளை 31.07.2021 ( சனிக் கிழமை ) முதல் 09.08.2021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை.


10. கொத்தவால் சாவடி மார்கெட் 01.08.2021 ( ஞாயிற்று கிழமை ) முதல் 09.08.2021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை