பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

 

  


காஞ்சீபுரத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது*


சின்ன காஞ்சீபுரம் பகுதியில் இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட மர்ம வாலிபர் குறித்து விஷ்ணு காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜூக்கு தகவல்கள் கிடைத்தது.

இவ்வழக்கு சம்பந்தமாக குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்ய காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை மேற்பார்வையில், விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது, சேஷாத்ரி பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த வாலிபர் உருவம் அதில் பதிவாகி இருந்தது.


 அதனடிப்படையில அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சின்ன காஞ்சீபுரம், கே.வி.எம். நகரை சேர்ந்த சரத்குமார் (வயது 24) என்பது தெரிந்தது. இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார் 


குடிபோதையில் தவறு செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கோரினார் அந்தப் பெண்  மன்னிப்பை ஏற்கவில்லை. இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


     🙏 முக கவசம் உயிர் கவசம்🙏