காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(23-06-21) அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி, இலவச தையல் இயந்திரம் மற்றும் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களை பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி.கீதா ஜீவன் மக்களுக்கு வழங்கினார் .
இந்நிகழ்வில் காஞ்சி தெறகு மாவட்டச் செயலாளர் திரு.க.சுந்தர், எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மா.ஆர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
நிருபர் மணிகண்டன்.