நாளிதழ், தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுடன் முதல்வர் பேச்சு



      தனியார் ஆம்புலன்ஸ் வெளியில் அதிக கட்டணம் வசூல். என புகார் வரவே கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது.ஆனால் 108 ஆம்புலன்ஸ் கட்டணம் என செய்தி பரவுகிறது.


ஆவின் பால் விலை லிட்டருக்கு  ₹3 குறைக்கப்பட்டது. ஆனால் ₹6 விலை உயர்த்தி ₹3 குறைக்கப்படுவதாக செய்தி பரவுகிறது.


பிற மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பதிவு மட்டும் போதும் என்று அரசு அறிவித்தது. அனுமதிக்கு காத்திராமல் பதிவு செய்துவிட்டு பயணிக்கலாம் ஆனால் இ- பாஸ் கட்டாயம் என்று செய்தி போடப்படுகிறது 

இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் .அரசின் செய்திகளை முழுமையாக வெளியீடுகள்.


அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள் அரசின் செய்திகள் முழுமையாக  வெளியிடுங்கள்

அரசின் செய்திகளை முழுமையாக வெளியிட வேண்டும் சந்தேகங்கள் இருந்தால் அமைச்சர்கள், அதிகாரிகள்யிடம் விளக்கம் கேட்டு போட வேண்டும்.

நாளிதழ், தொலைக்காட்சி  
செய்தி ஊடக ஆசிரியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.