இன்றைய ராசிபலன்

                  இ‌ன்றைய (08-05-2021) ராசி                                                                    பலன்கள்


மேஷம்


வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் வருமானம் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.ரிஷபம்


குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.மிதுனம்


பயணங்களால் நன்மை அதிகரிக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் சற்று அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.கடகம்


புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தனவரவுகளின் மூலம் திருப்திகரமான சூழல் உண்டாகும். தொலைபேசி தொடர்பான போக்குவரத்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு மேலோங்கும்.சிம்மம்


சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும் கன்னி


மனதில் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளால் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும்.துலாம்


தந்தையிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். பழைய கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வெளியில் செல்லும் பொழுது உரிய ஆவணங்களை எடுத்து செல்லவும்.விருச்சகம்


கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களுக்கிடையே மதிப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். சகோதரிகளின் வழியில் லாபம் அதிகரிக்கும்.தனுசு


உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனைவியின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு அதிகரிக்கும்.மகரம்


முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய செயல்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் நீங்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.கும்பம்


பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் நிலையில் சோர்வும், ஒருவிதமான சுறுசுறுப்பின்மையும் ஏற்பட்டு மறையும். குடும்ப உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். நண்பர்களிடம் பொறுமை வேண்டும்.மீனம்


சுபவிரய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மனதில் இருந்துவந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். துணிவுடன் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள்.


                           *சுபம்*

         திருமதி மோகனா செல்வராஜ்