தமிழகத்தில் மீண்டும் முழு பொது முடக்கம் போடும் திட்டம் இல்லை என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுகள் என்ன என்ன தமிழக அரசு அறிவிப்பு
👉பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை
👉வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி
ஆட்டோகளுக்கு ஓட்டுநர் உட்பட 2 பேருக்கு மட்டுமே அனுமதி
👉இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே அனுமதி
👉தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி
👉விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி
👉உணவகங்கள்,தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
👉கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை கடைகள் மட்டும் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை
👉திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க அனுமதி
👉அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி
👉வணிக வளாகங்கள் 50% விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி
👉அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
👉வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ- பதிவு முறை தொடரும்.
👉நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி
👉தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
👉முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள்,ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
👉அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை தொடரும்.
👉பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகத்துக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.
👉பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
👉தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும் முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்க கூடாது.
👉சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதை சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்பு நிர்வாகங்கள் செய்ய வேண்டும்.
(10-4-21) ஆம் தேதி அமுலுக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 30 தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது