இன்றைய ராசிபலன்

 


              இன்றைய 12-04-2021 ராசிபலன்*


12-04-2021


மேஷம்

குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடும்.ரிஷபம்


குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.மிதுனம்


வாகனப் பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கை ஏற்படும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் அந்நியர்களால் கிடைக்கும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். சொந்த ஊர் பயணங்களால் மேன்மை ஏற்படும்.கடகம்


ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.சிம்மம்


உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும். கடினமான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.கன்னி


தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முன்கோபத்தை விடுத்து பொறுமையுடன் செயல்படவும்துலாம்


தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்களின் வருகையால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மனம் மகிழ்வீர்கள். பேச்சுக்களில் பொறுமை வேண்டும்.
விருச்சகம்


உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் புத்திக்கூர்மை வெளிப்படும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செய்யவும். வாரிசுகளால் சுபவிரயங்கள் உண்டாகும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.தனுசு


பயணங்கள் தொடர்பான செயல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சொத்துச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.மகரம்


நண்பர்களின் ஆலோசனைகளால் புத்துணர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.கும்பம்


மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். அணிகலன் சேர்க்கை உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும்.மீனம்


சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதுவித உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.


                             *சுபம்*

               *🤘ஓம் நமசிவாய🙏*