பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா

 


            அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். அவர் பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.


இந்நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.