கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு சார்பில்
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்த்துவ கல்லூரியில் காகித அட்டைகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நவீன படுக்கைகள் கொண்ட கொரோனா கேர் சென்டர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
👉டெல்லியில் அரசு, தனியார் மருத்துவமனைகளை மீண்டும் கொரோனா தடுப்பு மருத்துவமனைகளாக மாற்ற முடிவு. - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
👉திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே ஆன்லைன் வகுப்புகள் நடத்த திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளை மாற்று இடங்களில் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு
👉துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்
👉தமிழகத்தில் இதுவரை முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.2.52 கோடி அபராதம் வசூல்
👉திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ₹ 2இலட்சத்து 68 ஆயிரம் அபராதம் வசூல்.
👉தொழிற்சாலை, ஓட்டல், கடைகளில் பணிபுரிவோர் 16ம் தேதிக்குள் தடுப்பூசி போட வேண்டும்
👉ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம். - மத்திய அரசு