செய்திகள்

        மேற்குவங்கம், அஸ்ஸாமில் முடிந்த முதல் கட்டத் தேர்தல்.. மே.வங்கத்தில் 79.79 சதவீதம் வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்
            தஞ்சை மாவட்டத்தில் மேலும் 15 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு


பூதலூர் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா


தஞ்சையில் கொரோனா பாதித்த கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை 53ஆக உயர்வு


தஞ்சை மாவட்டத்தில் 5 கல்லூரிகளில் கொரோனா பாதிப்பு               இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று. வீட்டு தனிமையில் இருப்பதாக தகவல்


         ஒரு வரி செய்திகள் !! 


👉 இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் மற்றும் 4 படைகளை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.


👉 பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவிற்கு, நாளொன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.👉 தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது.


👉 குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


👉 மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.


👉 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாய சங்கங்கள் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


👉 தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் முள்ளங்கி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


👉 நான் மீண்டும் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராவேன் என்ற நம்பிக்கை உள்ளது என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.


👉 புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லு}ரிகளுக்கும் இன்று முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றது.


👉 பெண் எஸ்.பி. அளித்த பாலியல் தொல்லை புகாரில், காவல் உயரதிகாரியிடம் தமிழக அரசின் உயர்மட்டக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.


👉 திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் (30-ந்தேதி வரை பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது.


👉 நாகர்கோவிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.14 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.