உலக அளவில் எல்லா நாடுகளிலும் இரண்டாவது அலை சென்று கொண்டிருக்கிறது.
நமது நாட்டில் முதல் அலை கடந்த ஆண்டு மே, ஜூன் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர், டிசம்பர் வரை இருந்தது. கடந்த ஜனவரியில் தான் கொரோனா முதல் அலை இறங்கியது. இப்போது, மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கிறது.
மக்கள் கூட்டம், கூட்டமாக செல்கின்றனர். இதனால், வேக,வேகமாக மீண்டும் கொரோனா பரவுகிறது. இப்படியே விட்டால் இது, பொது முடக்கத்தை நோக்கி தான் செல்லும். அதற்கு முன்னதாக நாம் பழைய மாதிரி முகக்கவசம் அணிய வேண்டும்.
திருச்சி அருகே சேதுராப்பட்டியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 237 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு பேராசிரியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட 15 பேரும் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குமரியில் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் நிலையில் அரசு பஸ்கள், தனியார் பஸ்களில் நடந்த சோதனையில், முக கவசம் இல்லாமல் அலட்சியத்துடன் பயணிகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயமாக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.