பெரம்பலூரில், பெண் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.
தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜேஷ் தாஸ் சென்றார்.
அப்போது அந்தப் பகுதியில் இருந்த பெண் எஸ்.பி ஒருவரிடம் ராஜேஷ் தாஸ் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது. அந்த பெண் எஸ்.பி காவல்துறை டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார்.
தமிழக அரசு இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஆறு பேர் கொண்ட குழு ஒன்றைத் அமைத்துள்ளது. இந்நிலையில், சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து, பெரம்பலூரில், பெண் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.