உள்ளே வராதே- திரும்பி போ- முதல்வர் பழனிசாமியை எதிர்த்து கருப்பு கொடி

 


முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டிய விவகாரத்தில், விநாயகம், சிவகுமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலையில் இருந்து செங்கத்துக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வர் பழனிசாமி சென்றுள்ளார். அப்போது செங்கம் அருகே உள்ள மலை கிராமத்தில் விவசாயிகள் சிலர் கருப்புக்கொடி காட்டி செங்கம் உள்ளே வராதே, திரும்பி போ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பாதுகாப்புக்காக பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அங்கு  சென்றனர். உடனடியாக கருப்புக்கொடி காட்டி அவர்கள் தப்பித்து சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில், முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்களிடம் போலீசார் கெடுபிடி காட்டினர். இந்நிலையில் கருப்புக் கொடி காட்டிய விவகாரத்தில், விநாயகம், சிவகுமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.