சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து

 

 


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 4 தொழிலாளர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து தீ எரிந்து வருவதால் தீ அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அனைத்து வருகின்றனர்.

4 தொழிலாளர்களுக்கும் தீ காயம் அதிகமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக  அவர்கள் மதுரைக்கு அழைத்து செல்ல வாய்ப்புள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் 5-வது வெடிவிபத்து இது, அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற விபத்தில் இதுவரை 31 பேர் உயிழந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.