தேமுதிக துணைசெயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை நுங்கப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் எல்.கே.சுதீஷூ அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது தேமுதிகவின் எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.