தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை என்று தலைமை செயலாளர் அறிவிப்பு.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வரும் திங்கள் கிழமை முதல் 9,10,11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.
9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன்/ டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும் 12ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளதாலும், அவர்கள் பொத்தேர்வை எழுத வேண்டியதாலும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.