சினிமா செய்திகள்

 அறிமுக இயக்குனர் வினோத் ராஜ் பிஎஸ் இயக்கியுவன் சங்கர் ராஜா இசைமைத்துள்ள ‘கூழாங்கல்‘ திரைப்படத்தை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிடுகின்றனர்

இந்த திரைப்படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற 50 வது ரோட்டர்டேம் சர்வதேச திரைப்படவிழாவில் டைகர் விருதை வென்றுள்ளது

அதோடு டைகர் விருதைப் பெறும் முதல்த் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும்இந்தியாவில் இது 2வது திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளதுகடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் சனல்குமார் சசிதரன் இயக்கிய ‘செக்ஸி துர்கா‘ என்ற மலையாளப் படத்துக்கு இந்த விழாவில் விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

***********************************

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது . 

ஏற்கனவே இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அந்த இரண்டு கதாபாத்திரங்களை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சூர்யா வாடிவாசல் படத்தில் தந்தை ,மகன் என்ற இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் ,அதில் தந்தையின் பெயர் ‘அம்புலி’ என்றும் ,மகனின் பெயர் ‘பிச்சு’ என்றும் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.