2021 - 22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை மெட்ரோ - ரூ.63ஆயிரம் கோடி ஒதுக்கீடு
வீடுகளுக்கு நேரடியாக கேஸ் விநியோகிக்கும் திட்டத்தில் கூடுதலாக 100 மாவட்டங்கள் சேர்க்கப்படும்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மேலும் 1கோடி பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன்
அடுத்த 3 ஆண்டுகளில் 7 இடங்களில் மெகா ஜவுளிபூங்கா அமைக்கப்படும் -
பங்குச் சந்தைகள் மூலம் எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு
அரசாங்கம் வசம் உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவினை பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்
தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் கேரளா மேற்கு வங்கம் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல்வேறு புதிய நலத் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்கும் பணி தொடரும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ஏற்கனவே நிலுவையில் உள்ள பல அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்கும் நடவடிக்கை வரும் நிதியாண்டில் செய்து முடிக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவிப்பு
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு
உள்கட்டமைப்பு
வசதிகள் மேம்பாடு
ஆரோக்கியமான இந்தியா
நல்லாட்சி
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு
அனைவருக்கும் கல்வி
பெண்களுக்கான அதிகாரம்
ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகிய எட்டு அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்
வருமான வரி அடுக்கு விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
வழக்கம் போல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை
கார்ப்பரேட் வரிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை - நிர்மலா சீத்தாராமன்.
ஓய்வூதியம் பெறும் 75 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்துவதில் சலுகை.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரி விதிப்பில் இருந்து விலக்கு.
வருமான வரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க புதிய குழு அமைக்கப்படும்.
கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை படைத்துள்ளோம்.
கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு.
2014ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 3.31 கோடியாக இருந்தது.
5ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 41% பங்கு.
இரும்பு, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கப்படும்.
பி.எஃப் பங்கு தொகையை தாமதமாக செலுத்துவதற்கான அபராதம் இனி இல்லை.
தமிழ்நாட்டில் ரூ 1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள்.
தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நீளத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்.
மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.
கேரளா, மேற்கு வங்க மாநிலங்களிலும் புதிய சாலை மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.
கேரளாவில் 1100 கி.மீ, மேற்கு வங்கத்தில் 675 கி.மீ, அஸ்ஸாமில் 1,300 கி.மீ நீளத்துக்கு நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
2022-ம் ஆண்டுக்குள் 8,500 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
11,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அகல ரயில் பாதைகள் அனைத்தும் 2023 டிசம்பருக்குள் மின்மயமாக்கப்படும்.
கேரளாவில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 65,000 கோடி நிதி ஒதுக்கீடு.
மேற்கு வங்கத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 95,000 கோடி நிதி ஒதுக்கீடு.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக காகிதமில்ல பட்ஜெட்டை தாக்கல் செய்தார் .நிர்மலா சீதாராமன்;
நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து ஆவணங்கள் ஏதுமின்றி ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை.