ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

 


தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.ரேஷன் கடைகளில் நியமிக்கப்படும் புதிய ஊழியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு.

அரசாணையின்படி ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 5,000-இல் இருந்து ரூ. 6,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ. 8,600 – ரூ. 29,000 வழங்கப்படும்.

இதேபோல் கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 4,250-இல் இருந்து ரூ. 5,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு ரூ. 7,800-ரூ. 26,000 என்று தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.