முக்கியச் செய்திகள்.



 மாநிலச் செய்திகள்

இன்று வெளியீடு:

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.

*************************

இன்று நடைபெறுகிறது:

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

**********************

சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை:

சென்னையில் உள்ள தெருக்களின் பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டும் அரசியல் கட்சிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

***************************

தமிழக அரசு அரசாணை வெளியீடு:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பகுதி நேரப் பயிற்றுநர்களின் ஊதியம் 7700-லிருந்து 10,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

**********************

மாவட்டச் செய்திகள்

இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி:

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*****************************

உலகச் செய்திகள்

இலங்கை அமைச்சரவை ஒப்புதல்:

இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள மேற்கு துறைமுகத்தை இந்தியாவுடன் சேர்ந்து விரிவாக்கம் செய்ய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

****************************

அமெரிக்க அதிபர் எச்சரிக்கை:

மியன்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

*********************

நாசாவின் செயல் தலைவர் நியமனம்:

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

**************************

வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை:

ராட்சத பனிப்புயல் ஒன்று இங்கிலாந்தை புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

*******************

மீண்டும் அனுமதி:

ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிட பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மீண்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


*************************

விவசாயிகள் போராட்டத்தை தூண்டியதாக 250 கணக்குகளை மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் முடக்கிய டுவிட்டர் நிறுவனம், கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மீண்டும் செயல்பட அனுமதித்துள்ளது.

************************

இன்று இரவு வரை நீட்டிப்பு:

டெல்லியின் சிங்கு, காசிப்பூர், திக்ரி எல்லைகளில் இணையதள சேவை முடக்கத்தை இன்று இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாளை தொடங்கி வைக்கிறார்:

பெங்க;ருவில் தொடங்கும் 13வது சர்வதேச விமான கண்காட்சியை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நாளை தொடங்கி வைக்கிறார்.

********************************

விளையாட்டுச் செய்திகள்

ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி:

7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் நேற்று இரவு நடைபெற்ற 79வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது.