சினிமா செய்திகள்

 


இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் மேர்வின் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்திலிருந்து கடந்த 1 ஆம் தேதி படக்குழு டீசரை வெளியீட்டனர். அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் பாடலான ஜெய் சுல்தான் என்ற பாடலை வெளியீட்டுள்ளனர். இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர், ஜூனியர் நித்யா & கானா குணா ஆகியோர் படியுள்ளார்கள்.

***************************

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று சினம் .ஜீஎன்ஆர் குமாரவேலன் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளார் .மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய்யின் தந்தையும் ,நடிகருமான விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்க கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் .

இந்த நிலையில் தற்போது சினம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது அருண் விஜய்யின் சினம் படத்தினை மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

*****************************

கேஜிஎஃப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி முன்னணி இயக்குனரின் பட்டியலில் இடம் பிடித்தவர் பிரசாந்த் நீல் .தற்போது இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துள்ளார் என்பதும்,அது ஜூலை 16-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரசாந்த் நீலின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகவும் ,அந்த படத்தினை தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 

*****************************