மினி செய்திகள்

 பெட்ரோல், டீசல் மீதான வரியால் தமிழகத்திற்க்கு பெரும் வருவாய் கிடைப்பதால், வரியைக் குறைத்து விலையைக் குறைக்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

************************

சென்னை  அடுத்த குன்றத்தூர் அருகே பெட்டிக்கடைக்காரர் செல்வராஜ்(63) என்பவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். 2 நாட்கள் முன் ஏற்பட்ட தகராறை அடுத்து முன் விரோதத்தில் செல்வராஜ் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

*************************

சென்னை அண்ணாமலைபுரம் பிஷப் கார்டனில் வசிக்கும் தொழிலதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் விஸ்வநாதன் வீட்டில் இருந்து ரூ.1 லட்சம் பணம் மற்றும் வைர நகைகளையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொழிலதிபர் விஸ்வநாதன் குடும்பத்துடன் குருவாயூர் சென்றிருந்தபோது மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளார்.

***************************

மும்பையில் போலீஸ் அதிகாரிகள் போல் நட்சத்திர ஹோட்டல்களில் சோதனை நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். வில் பார்லேவில் 5 நட்சத்திர ஓட்டலில் போலீஸ் அதிகாரிகள் போல சோதனையிட்ட கும்பல் சி.சி.டி.வி. காட்சியால் சிக்கியது. கொள்ளை கும்பல் தப்பியோடுகையில் விட்டுச்சென்ற ரூ.12 கோடி ரொக்க பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

**********************

விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 64 பயணிகள் மற்றும் விமானக்குழுவினர் பத்திரமாக உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

**************************

புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. புதுச்சேரியில் அதிகபட்சமாக 2செ.மீ.வரை மழை பதிவாகியுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

****************************