இரு வரி செய்திகள்



 முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வரும் 27-ம் தேதியும், தேரோட்டம் 28-ம் தேதியும் நடைபெறுகிறது.

************************

தமிழக அளவில் சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் 5,558 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. சிறந்த காவல் நிலையமாக தேர்வானதால், குடியரசு தினத்தன்று காவல் ஆய்வாளர் குமாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதை வழங்குகிறார். 

***********************

கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

*****************************

இலங்கை கடற்படையால் தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கொலை வழக்கில் இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

************************

தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்கு அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

*********************************

3 வேளாண் சட்டங்களையும் முற்றாக கைவிடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் உறுதி அளித்துள்ளனர். 

************************************

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20.97 லட்சத்தை தாண்டியது. 

மேலும் 111,285 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.