முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
**********************************
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.40,600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
**************************
உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நத்தாமூர் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடீநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர்.
*********************************
சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்க போவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என நமது எம்.ஜி.ஆர் நாளிதழிளில் வெளியாகியுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
*********************************
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே வேலாங்குளம் விலக்கில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் மதுபாட்டில்கள் அடங்கிய 10 பெட்டிகளை திருடிச் சென்றனர்.
*****************************
நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.3.85ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை விலை ரூ.4-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
**********************
மதுரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக கட்டிய கோயிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஆர்.பி.உதயகுமார் 12 ஏக்கரில் கட்டிய ஜெ.கோயிலை முதல்வர் திறந்து வைக்கிறார். விழாவில் ஜெயலலிதா கோயில் கோபுர கலசங்களுக்கு யாகசாலை பூஜை நடத்தி புனித நீர் ஊற்றப்படுகிறது.
*************************************