புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் தர்மராஜன்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரபலமான சித்த வைத்தியராக விளங்கியவர். இவரது தந்தை நாராயணசாமி பிரெஞ்சு ஆட்சி காலத்திலேயே புதுச்சேரியில் வைத்தியம் பார்த்தவர்.
இதனால் தர்மராஜனும் தனது 30வது வயதில் (1976) சித்த வைத்தியம் பார்க்க தொடங்கியுள்ளார். புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் இயங்கிய மருத்துவமனை இவரது அடையாளம் என்றாலும் தமிழகத்தின் கடைகோடி கிராமங்களுக்கும் இவரது சேவை பரந்து விரிந்திருந்தது.
முன்னாள் முதல்வர் எம்ஆர்ஜி, நடிகர் சிவாஜி உள்பட கலைத்துறையிலும் பலருக்கு அறிமுகமானவர்.
இந்நிலையில் 07.01.2021 காலை 11 மணியளவில் புதுச்சேரியில் தங்கியிருந்த டாக்டர் தர்மராஜன் மாரடைப்பால் காலமானார்.
அவரது உடல் புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியில் உள்ள அவரது மகள் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அரும்பார்த்தபுரம் வில்லியனூர் மெயின்ரோட்டில் உள்ள சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.