ஸ்ரீரங்கத்தில் நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான்

 சிவ வழிபாடு செய்பவர்கள் கோயில் என்று சொன்னால் சிதம்பரம் கோயிலைத்தான் சொல்லுவார்கள். 

அதேபோல், கோயில் என்று வைணவர்கள் சொன்னால், அது ஸ்ரீரங்கத்தைத்தான் குறிக்கும் என்பார்கள்.

தன்வந்திரி (Dhanvantari) இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. 

பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி(தனிக்கோயிலில்) காணப்படுகிறார். 

இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.

அவதார தோற்றம்

தேவர்கள் அசுரர்களுடன் போராடி வ் வலிமை இழந்தவர்களானார்கள். அவர்களுக்கு உயிர் அச்சம் ஏற்பட்டது. எனவே படைக்கும் கடவுள் பிரம்மாவிடமும், தேவர்கள் தலைவரான இந்திரனிடமும் முறையிட்டார்கள். 

தேவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக பாற்கடல் கடையப்பட்டது. அப்போது கடலிலிருந்து தன்வந்திரி அவதாரம் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. 

இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தை தேவர்கள் உண்டதால் நிறைவாழ்நாளைப் பெற்றார்கள்.

தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம். பிரமன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரியக் கடவுளுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரியனும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார்.

சூரியக் கடவுளிடம் இருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுத் தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது. தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். 

அதாவது, சூரியனே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு இருக்கிறது. தன்வ என்ற பதத்துக்கு வான்வெளி என்று பொருள். தன்வன் என்றால் வான்வெளியில் உலவுபவன் என்று பொருள் கொள்ளலாம். 

எனவே, இவரையேச் சூரியன் என்றும் சொல்வார்கள். சூக்த கிரந்தங்களில் தன்வந்திரி என்கிற திருநாமம் சூரியக் கடவுளையேக் குறிப்பிடுகிறது. 

தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தைப் படைத்தவர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது. தன்வந்திரியை வைத்தியத்தின் அரசன், சிறந்த மருத்துவர் என்றும் குறிப்பிடுகிறது பத்ம புராணம். வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவையும் தன்வந்திரி அவதாரம் பற்றிச் சொல்கிறது

ஸ்ரீரங்கத்தில் நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான்! 

பிரமாண்டமான கோயிலாகத் திகழ்கிறது ஸ்ரீரங்கம். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள அற்புதமான திருத்தலம். பலப்பல புராணத்தொடர்புக ளைக் கொண்டது ஸ்ரீரங்கம் திருத்தலம்

புதன் கிழமைகளில் தன்வந்திரி பகவானை ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு வந்து தரிசியுங்கள். நீண்டகால நோயையெல்லாம் தீர்த்து, ஆரோக்கியத்தை வழங்குவார் தன்வந்திரி பகவான்.

ஒருமுறை கிருஷ்ண ஜயந்தி உத்ஸவத்தின் போது, அரங்கனும் கிருஷ்ண பரமாத்மாவும் திருவீதி உலாவாக எழுந்தருளினர். தன்னுடைய அரண்மனைக்கு முன்னே ஸ்வாமிக்கு உபயம் ஒன்றை ஏற்படுத்தினார் விஜயநகரப் பேரரசின் அச்சுதராயர். அதற்காக, ஏராள மானியங்களை வழங்கினார். அந்த உபயம் இன்று வரை தொடர்கிறது.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தின் சந்திர புஷ்கரணியைச் சுற்றி அதன் அங்கமாக தெற்கே அஸ்வ தீர்த்தம் உள்ளது. தென் கிழக்கில் ஜம்பு தீர்த்தம் அமைந்துள்ளது. கிழக்கில் பில்வ தீர்த்தமும் வடமேற்கே வகுள தீர்த்தமும் வடக்கே கதம்ப தீர்த்தமும் அமைந்துள்ளன. 

வட கிழக்கில் ஆம்ர தீர்த்தமும் மேற்கில் புன்னாக தீர்த்தமும் தென் மேற்கே பலாச தீர்த்தமும் என மொத்தம் எட்டு தீர்த்தங்கள் அமைந்திருக்கின்றன என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்ரீரங்கத்தில் தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழியில், அரங்கனுக்கே வைத்தியம் பார்க்கும் வைத்தியனாக, ஸ்ரீமந் நாராயணப் பெருமாள், தன்வந்திரியாக காட்சி தருகிறார். திருக்கரத்தில் அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் முதலானவற்றுடன் காட்சி தருகிறார்.

தன் வந்திரி பகவான் மிகுந்த சாந்நித்தியத்துடன் திகழ்கிறார், ஸ்ரீரங்கம் திருத்தலத்தில். இவரை வழிபட்டால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.

புதன் கிழமைகளில் தன்வந்திரி பகவானை ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு வந்து தரிசியுங்கள். 

நீண்டகால நோயையெல்லாம் தீர்த்து, ஆரோக்கியத்தை வழங்குவார் தன்வந்திரி பகவான்

ஓம் நமோ நாராயணாய.

ஓம்நமசிவாய

மோகனா செல்வராஜ்