கொச்சி-மங்களுரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
_______________________________
பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அசாம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
_____________________________
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தரும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு திட்டவட்டமாக அறிவித்துள்ளது
________________________
கேரள அரசு அறிவிப்பு:
தீவிரமாக பரவி வரும் பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது.
______________________________________
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவர்:
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
___________________________________
வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்;ர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
_____________________________________
விளையாட்டுச் செய்திகள்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளுக்கு 659 ரன்களை குவித்துள்ளது.