செய்திகள்

 


விவசாயிகளை அழைத்துப் பேசாமல் பிரதமர் பிடிவாதமாக இருப்பதுபோல், முதல்வர் பழனிசாமி அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாடினார். பிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு எனவும் அறிவித்துள்ளார்.

**********************************

அடுத்த மாதம் இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி வந்து சென்ற பிறகு தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியுள்ளது எனவும் கூறினார். 

*************************************

தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பழனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

********************************

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார். சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ராஜீவ்காந்தி அக்கட்சியில் இணைந்தார்.

******************************

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

***********************************

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 88.82 ரூபாய், டீசல் லிட்டருக்கு 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 88.82 ரூபாய், டீசல் லிட்டர் 81.71 ரூபாய் எனவிலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

**************************

நாமக்கல் சட்டமன்ற தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிவேலன் காலமானார். அவருக்கு வயது 85. பரமத்திவேலூரை அடுத்த கோப்பணம்பாளையம் கிராமத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பழனிவேலன் காலமானார்.

****************************

சென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.15க்கு புறப்பட்டு மாலை 5.45க்கு திருப்பதி சென்றடையும்; மறுமார்க்கத்தில் மாலை 6.10க்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் சென்னை வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*****************************