காலாவதியான கமல்ஹாசனின் கார் இன்சூரன்ஸ்

 


இன்னும் சில மாதமே தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் “அதிமுகவை நிராகரிக்கிறோம்” அதிமுக சார்பில் “வெற்றி நடை போடும் தமிழகம்” என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், அவர் பிரச்சரத்திற்காக பயன்படுத்தி வரும் கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாமல் உள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த காரின் இன்சூரன்ஸ் கடந்த மார்ச் மாதம் 06-ம் தேதி முடிந்துள்ளதாக இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படத்தில் உள்ளது. 

இந்நிலையில், இன்சூரன்ஸ் முடிந்த காரில் ஏன்..? பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறீர்கள்..? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.