கோவிலில் உள்ள கொடி மரம் உணர்த்தும் தத்துவம் என்ன.

 

கோவிலில் உள்ள கொடி மரம் உணர்த்தும் தத்துவம் என்ன.உயிர் பாசத்தை விட்டு இறைவனை அடைவதைக் குறிப்பது கொடிமரம்.

கோயிலுக்கு கொடிமரம் அமைப்பது ஏன்?

கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது.

கொடி மரம் துவஜஸ்தம்பம் என்று அழைக்கப்படும் ஆலய கொடி மரமும் மிகப்பெரிய தத்துவங்களை தன்னுள் கொண்டுள்ளது.

கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது.

 கொடி மரத்தின் தண்டு சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். 

கமுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிகமிகக் குறைந்த நன்மையளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும். 

கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சிவரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். அடிப்பாகம் சதுரமாக இருக்கும். 

இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். 

இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமையப்பெற்றது.

கொடிமரமும் - மனிதனும்

கொடிமரம் மனித உடலில் முதுகெலும்பின் செயல்பாட்டினை விளக்குவம்.கொடிமரம் மனிதனுடைய முதுகு தண்டிற்கு ஒப்பானதாக விளங்குகிறது.கொடிமரத்தில் இருக்கும் ஒவ்வொரு அடுக்கும் அல்லது தட்டும் மனிதனின் முதுகிலுள்ள இணைப்பை குறிப்பிடுகின்றன. கொடிமரத்திலுள்ள உச்சி பகுதியில் அமைந்திருக்கின்ற மூன்று நிலைகள் மனிதனின் மூவித மூளைகளைப் பற்றி விளக்குகின்றன. அவை பெருமூளை (Cerebrum).மத்திய மூளை (Midbrain), கீழ்மூளை (Cerebellum) ஆகியவை.

கொடிமரத்தின் முதல் நிலை பெருமூளையின் முன் பகுதி:-பேச்சினை இயக்குவது, இதன் ஒத்துழைப்போடு எண்ணங்கள்,உணர்ச்சி மற்றும் செயல் திறனை கட்டுப் பாட்டில் வைதிருக்கும் இடமாக இப்பகுதி காணப்படுகின்றது.

மேற்பகுதி உடலியல் உணர்வாகிய அறிதல்,தொடுதல், அழுத்தம், தட்ப வெட்பம் மற்றும் வலியை அறிந்த பின் பொருள் மாற்றம் செய்யும் இடமாக அமைகின்றது. 

பக்கப் பகுதி. ஒலியை நினைவு கூர்தல்,இதன் நாதமும் ஓசையின் வேகமும் இப்பகுதியில் இடம் பெறுகின்றன.

இப்பகுதியில் அமைந்திருக்கும் பிளவு நினைவுகளை சேமிக்கும் கிடங்காக முக்கிய பங்காற்றுகின்றது. பின் பகுதி:- இவ்விடம் கண்டுபிடித்தல் மற்றும் காணும் காட்சியை பொருள் மாற்றம் அல்லது விளக்கம் செய்வது. 

கொடிமரத்தின் நடு நிலை மத்திய மூளையை குறிக்கின்றது. மத்திய மூளையின் ஆளுமை புறநடவடிக்கையுடனும் இதன் எல்லை வட்டார தொடர்புடைய உறுப்புக்களின் வெளியுறையுடனும் தகவல் தொடர்பு நிலையத்துடனும் (Thalamus) இணைகின்றது. கொடிமரத்தின் கீழ் நிலை இரண்டாவது பெருமூளை எனும் கீழ் மூளையை குறிக்கின்றது. 

இதன் நரம்புத் தொடர்புகள் மூளையின் மற்ற வட்டார இணைப்புடன் இணைகின்றது. முதுகு தண்டின் நரம்பு கற்றை எளிதாக வழவழப்புடனும் துல்லியதமாக இயங்குவதற்கு சமநிலை கட்டுப் பாட்டில் அமைந்திருக்கும். திருவிழாக் காலங்களில் கொடிமரத்தின் கயிறு உச்சி ஏறி தொடுவதைப் போல அமைந்திருக்குமானது உடலிலுள்ள நரம்பு கற்றைகள் அனைத்தும் முதுகு தண்டு வழியாக செல்வது போல் உள் மற்றும் வெளி உணர்வுகளின் செயல்பாட்டின் தொடர்புகளை மூளைக்கு அனுப்பி வைக்கும் செயலை கொடிமரத்தில் காண்பிக்கப் படுகின்றன.

நரம்பு கற்றைகள் அனைத்தும் உடலில் பல பாகங்களுக்கு இணைக்கப் பட்டு நரம்பு வழியாக தகவல் தொடர்பினை பெறப்பட்டு இதன் வாயிலாக உள் மற்றும் புற சூழ்நிலைக் கேற்றவாறு மூளைக்கு தகவல் அனுப்புவதும் பெறுவதுமாக அமைகின்றது.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும்  நமது  உண்மை  செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்

நன்றி. பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்