அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்ததற்கு ஆளுநர் அதிருப்தி

 


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்ததற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

குழு அமைத்தது நியாயமற்றது எனவும் விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டும் என கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். 

துணைவேந்தரை விசாரிப்பதற்கான குழுவை தனக்கு தெரியாமல் அமைத்தது குறித்தும் ஆளுநர் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்ததற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனக்கு தெரியாமல் அரசு குழு அமைத்து விட்டதாகவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ள ஆளுநர் , கலையரசன் தலைமையிலான குழு விசாரணையை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதத்துக்கு தமிழக அரசு தரப்பிலிருந்து இதுவரை பதில் கடிதம் அனுப்பப்படவில்லை.