பிரேக் பிடிக்காத கண்டெய்னர் லாரி: நூலிழையில் உயிர்தப்பிய இருவர் - வீடியோ!

 

கண்டெய்னர் லாரி விபத்தில் இருந்து நூலிழையில் இருவர் உயிர்தப்பினர். அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது
கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, பிரேக் பிடிக்காததால் சாலையோர கடையில் மோதி விபத்துக்குள்ளானது. 

வாளையாறு சோதனைச் சாவடியைக் கடந்து வந்த லாரியை, சாலையோரத்தில் நிறுத்த ஓட்டுநர் முயற்சித்துள்ளார். 

அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மோதித் தள்ளிவிட்டு கடைக்குள் புகுந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவர் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாரும் பாதிப்படையாமல் உயிர்தப்பினர்.