விவசாயிகள் போராட்டம் -பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

 

விவசாயிகள் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தி வரும் நிலையில் ,இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்  ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் ,மறுபுறம் எதிர்ப்பும் இருந்து வருகிறது.டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணியை நடத்தினார்கள்.


ஆனால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,பின்பு டெல்லியில் உள்ள புராரி பகுதியில் போராட அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் 6-வது நாளாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பஞ்சாப் ,ஹரியானா விவசாயிகளுக்கு ஆதரவாக உத்திர பிரதேச விவசாயிகளும் குவிந்து வருகின்றனர்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,01.02.2020  3 மணி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


இரண்டு நாட்களுக்கு முன் இந்த அழைப்பு விடுக்கப்பட்டாலும் ,முதலில் விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவா ? வேண்டாமா ? என்று ஆலோசித்து முடிவு செய்த பின்னரே அவர்களது முடிவு தெரிய வரும் .


நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் அறிவித்தது.


இதனிடையே டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்திற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ,உள்துறை அமைச்சர் அமித்ஷா ,பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.அங்கு சென்ற அவர்கள் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.